Author: நினைவுகள்-செந்தில்
•3:22 PM
நாம் தன்னம்பிக்கை இல்லாமலும் வாழ்கையின் மீது ஒரு பிடிப்புமும் இல்லாமலும் இருப்போ
ம். ந
ம்மால் முடியாது என்று முயற்சி செய்யாமலே இருப்போம். ஆனால் கீழே உள்ள படங்களை பாருங்கள்....
ஜெஸ்ஸிக எனும் இந்த பெண் பிறக்கும்போதே இரு கைகளும் இல்லை. கைகள் இல்லாமல் போனதற்கு என்ன காரணம்
என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை.
அப்படி இருந்தும் இந்த பெண் தன்ன
ம்பிக்கை இழக்காமல், தன்னால் பிறரைப்போல் சாதிக்கமுடியும் என்று நி
ருபித்திருக்கிறாள்.
எப்படி என்று பாருங்கள்
தன் கால்களால் வி
மானத்தையே ஓட்ட கற்று
க்கொண்டாள்.
உலகிலேயே கால்களால் விமானத்தை ஓ
ட்டும் முதல் பெண் என்
கின்ற சான்றிதழ் பெற்றிருக்கிறாள்.
முடியாது என்கின்ற
வார்த்தையே தன் அகராதியிலே இ
ல்லை என்பதை நிருபித்திருக்கிறாள்.
தன் கால்களால் இலகுரக விமானங்களை, 10,000 அடி
உயரத்தில் பற
க்க உரிமம் பெற்றிருக்கிறாள்.
இவரது பயிற்சியாளர் இந்
த பெண்ணிடம் உள்ள திற
மையை கண்டு வியந்திருக்கிறார்.
இவரிடம் ப
யிற்சிபெறும் மற்றவர்கள் இந்த பெண்ணின் திறமையை நெருங்ககூட முடியவில்லையாம்.
இவரிடம் முதன் முதலில் இந்த பெண் வரும்போதும், தனியாக தன் கால்களால் காரை ஒட்டிக்கொ
ண்டு வந்துள்ளாள். இதை கண்ட பயிற்சியாளர் இந்த பெண்னால் விமானத்
தை ஓட்டுவதில் எந்த சிரமமும் இருக்காது என்று
எண்ணி உள்ளார்.
இந்த பெண்ணிற்கு எல்லா விதமான பயிற்சிகளையும் அளித்துள்ளார். இந்த பெண்ணும் தன்னால் முடியாது என்று எதையு
ம் விடாது எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாள்.
தன்னம்பிக்கையின் மீது நாம் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சியம் என்பதற்கு இதைவிட வேற என்ன வேண்டும்.
இதை படித்துவிட்டு நீங்கள் ஓட்டும் பின்னுட்டமும் இடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நான்....!
|
Author: நினைவுகள்-செந்தில்
•11:30 AM
|
Author: நினைவுகள்-செந்தில்
•3:02 PM
Marketing Concepts பற்றி நாம் படிக்கும் போது, நமக்கு அது புரிந்தும் புரியாத மாதிரி இருக்கும். அதனால் அதை பற்றிய ஒரு ஜாலியான விளக்கம்....
- நீங்கள் ஒரு விருந்தில் அழகான, பணக்கார ஒரு பெண்ணை பார்க்கிறிர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்"என்று கூறினால் அது Direct Marketing.
- உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து "அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று கூறினால் அது Advertising.
- நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று கூறினால் அது Telemarketing.
- அந்த அழகான பெண்ணே உங்களிடத்தில் வந்து "நீங்களும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றால் அது Brand Recognition.
- அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறுகிறர்கள். உடனே அதற்கு அந்த பெண்ண உங்களின் கன்னத்தில் அறைந்தால்... அதுதான் Customer Feedback.
- அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று "நானும் பணக்காரன்தான். என்னைதிருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று கூறியதற்கு, அந்த பெண்தன்னுடைய கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.
- நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் பேசுவதற்கு முன்னால் வேறொரு நபர் வந்து அந்த பெண்ணிடம் "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இதுதான் Competition eating your market share.
- நீங்கள் அந்த அழகான பணக்கார பெண்ணிடம் சென்று "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று கூறுவதற்கு முன்பே உங்களின் மனைவி அருகில் வந்தால் Restriction for entering new markets.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று....!
என் நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியது. தமிழாக்கம் என்னுடையது.
பிடித்திருந்தால் ஓட்டும் மற்றும் பின்னுட்டம் இடவும்.
|
Author: நினைவுகள்-செந்தில்
•6:11 PM
ஹாய் தோனி...!
(தோனியின் இப்போதைய நிலைமை - ஒரு கற்பனை கதை)
உலக கோப்பையின் தோல்விக்கு பிறகு தோனி வீட்டில் சோர்வாக அமர்ந்து இருக்கிறார். அப்போது அவரது அம்மா...
தோ. அம்மா : தோனி இங்க பார். சும்மா மேட்ச் தோத்ததையே நினைச்சுட்டு இருக்காதடா.
தோனி : சும்மா இருமா. உனக்கென்ன தெரியும்? வெளில தள காட்ட முடியல. ரசிகர்கள் எல்லாம் ரொம்ப கோபமா இருக்காங்க. யாரோடவும் பேசக் கூட முடியல.
தோ. அம்மா : நீ இப்படியே இருந்தினா உனக்கு பைத்தியம் தான் புடிக்கும். அதனால நான் சொல்லுறமாதிரி செய். கடைக்கு போய் காய்கறி வாங்கிட்டு வா. வெளில போன உனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.
தோனி : போம்மா... நான் வெளில போன ரசிகரெல்லாம் என்னை அடிக்கவே வந்துடுவாங்க.
தோ. அம்மா : நீ இப்படியே போன தானே உன்னை அடையாளம் தெரியும். நீ என்னோட புடவையை எடுத்து கட்டிட்டு, பெண் மாதிரி போ. உன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது.
தோனி : முடியாதுமா... எனக்கு பயமா இருக்கு.
தோனி மிகவும் அடம்பிடிக்க... அவரது அம்மா எப்படியோ அவரை சம்மதிக்க வைத்துவிடுகிறார். தோனியும் புடவையை கட்டிக்கொண்டு பெண்ணாக மாறினார். அரை மனதுடன் மார்கெட்டுக்கு காய்கறி வாங்க செல்கிறார்.
மார்கெட்டில் பயந்து பயந்து நடந்து செல்கிறார். யாரவது பார்கிறர்களா என்று சுற்றி பார்த்துக்கொண்டே செல்கிறார். தக்காளி வாங்கினார். வெங்காயம் வாங்கினார்.
"இரண்டு காய் வாங்கியாச்சு... இன்னும் கத்திரிக்காய் மட்டும் வாங்கின போதும். சிக்கிரமா விட்டுக்கு போய்டலாம்" என்று மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டு கத்திரிக்காய் வாங்க செல்கிறார்.
கத்திரிக்காய் வாங்கிக் கொண்டு திரும்பி வீட்டிற்க்கு வேகமாக நடக்க ஆரம்பிக்கிறார்.
"அப்பாடா.... எப்படியோ எல்லாம் வாங்கியாச்சு. யாருக்கும் என்னை அடையாளம் தெரியலே. நல்ல வேளை தப்பிச்சேன். " என்று நினைத்துக்கொண்டே நடக்கையில்....
"Hai தோனி.....! நீ எப்படி இங்கே?" என்று ஒரு பெண்மணி தோனியை மடக்கினார்.
தோனிக்கு முகம் வெளிறிவிட்டது.....
தோனி : உங்களுக்கு எப்படி நான் தான் தோனி என்று தெரிஞ்சது?
பெண் : என்னை தெரியலையா....? நான் தான் யுவராஜ் சிங்....!
-0-0-0-
-0-
பழைய சரக்கு.... புதிய வடிவில்........ ரசித்தீர்கள் என்றால் ஒட்டு போடவும். கருத்துக்களையும் தெரிவிக்கவும்.
|
Author: நினைவுகள்-செந்தில்
•10:20 AM
நம் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் BCCI தான். சென்ற ஜனவர்யில் தொடங்கிய இந்திய அணியின் ஆட்டங்கள் இந்த மாதம் வரை தொடர்கிறது. அவர்களும் பாவம் மனிதர்கள் தானே. இயந்திரங்கள் அல்ல. ஓய்வு என்பது வேண்டாமா? இந்திய அணியின் Coach கிறிஸ்டன்
கூறியது போல் IPL போட்டிக
Image via Wikipedia
ள் நமது வீரர்களை கசக்கி
பிழிந்து எடுத்துவிட்டது என்பது உண்மைதான். T20 போட்டிகள் சாதாரணமான போட்டிகள் அல்ல. அதில் விளையாடும் வீரர்கள் ஒவ்வொரு பந்துக்கும் அவர்களின் முழு திறமையை வெளிபடுதியே ஆக வேண்டும்.
IPL இல் நன்றாக ஜொலித்தவர்களை தான் இந்திய அணியில் இடம்பிடித்து உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஓய்வு போதாமல் தான் உலக கோப்பை போட்டிகளை அவர்கள் சந்தித்தனர். IPL போட்டிகள் முடிந்து குறைந்தது ஒரு மாதமாவது ஓய்வு அளித்துஇருகக வேண்டும். ஆனால் BCCI நமது வீரர்களை ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக தான் பயன்படுத்துகிறது. அவர்கள் மூலம் எப்படி வருவாய் ஈட்ட முடியம் என்பதில்தான் BCCI கவனம் செலுத்துகிறது என்று தோன்றுகிறது. என்னதான் திறமையும், அனுபவமும் இருந்தாலும், வீரர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியம்.
இந்திய அணியை போல் சிறந்த அணி வேறு இல்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்திய அணியின் வெற்றிகள் தொடரவேண்டுமானால், BCCI தனது வியாபார போக்கினை கைவிடவேண்டும்.
நன்றி.
|
Author: நினைவுகள்-செந்தில்
•11:25 AM
Image via Wikipedia
நாம் yahoo Messenger -இல் இருக்கும்போது நம் நண்பர்கள் offline இல் இருப்பார்கள். நாம் அவர்கள் இன்னும் online இக்கு வரவில்லை என்று நினைதுகொண்டிருபோம். ஆனால் உண்மையில் அவர்கள் online இல் தான் இருப்பார்கள். அவர்கள் தங்களை Invisible user ஆக மறைந்துஇருபார்கள். ஆனால் நம்முடைய messenger நமக்கு அவர்கள் offline இல் இருப்பதாக காட்டும். இப்படி Invisible user ஆக இருப்பவர்களை கண்டறிய கிழ்கண்ட தளங்களுக்கு சென்று அவர்களின் yahoo ID யை கொடுத்தால், அந்த தளம் அவர்கள் உண்மைலயலே offline இல் உள்ளாரா? இல்லை Invisible user ஆக உள்ளாரா என்று சொல்லிவிடும். சில சமயம் நம் பெண் நண்பர்கள் நம்முடன் இப்படிதான் விளையாடுவார்கள். அவர்களை கண்டறிய இது உங்களுக்கு உதவும்.
http://www.yahoo-status.com/
http://www.invisiblestatus.com/
http://www.yahoostatus.org/
Author: நினைவுகள்-செந்தில்
•10:39 AM
இது என்னுடைய முதலாவது பதிவு. படித்து முடித்தவுடன் எப்படி உள்ளது என்று பின்னோட்டம் இடவும். என் முயற்சியை பாராட்டி ஓட்டளிக்கவும் ப்ளிஸ்....
நாம் அலுவகத்தில் மும்மரமாக வேலையில் ஈடுபட்டு இருக்கும்போது சில இடைஞ்சல்கள் வரும்போதும் நாம், நம்மை அறியாமல் எரிச்சல் மற்றும் கோபம் அடைவோம். சில பேர் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். இது நமக்கு சாதரணமாக தெரியலாம். ஆனால் கிழே உள்ள வீடியோகளை பாருங்கள். எப்படி எல்லாம் கடுப்பாக்கிறார்கள் என்று.
கடுப்பு - 1
கடுப்பு - 2
கடுப்பு - 3
கடுப்பு - 4
எப்படி உள்ளது?