Author: நினைவுகள்-செந்தில்
•3:22 PM
நாம் தன்னம்பிக்கை இல்லாமலும் வாழ்கையின் மீது ஒரு பிடிப்புமும் இல்லாமலும் இருப்போம். நம்மால் முடியாது என்று முயற்சி செய்யாமலே இருப்போம். ஆனால் கீழே உள்ள படங்களை பாருங்கள்....




ஜெஸ்ஸிக எனும் இந்த பெண் பிறக்கும்போதே இரு கைகளும் இல்லை. கைகள் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை.

அப்படி இருந்தும் இந்த பெண் தன்னம்பிக்கை இழக்காமல், தன்னால் பிறரைப்போல் சாதிக்கமுடியும் என்று நிருபித்திருக்கிறாள். எப்படி என்று பாருங்கள்


தன் கால்களால் விமானத்தையே ட்ட கற்றுக்கொண்டாள்.

உலகிலேயே கால்களால் விமானத்தை ஓட்டும் முதல் பெண் என்கின்ற சான்றிதழ் பெற்றிருக்கிறாள்.

முடியாது என்கின்ற வார்த்தையே தன் அகராதியிலே இல்லை என்பதை நிருபித்திருக்கிறாள்.

தன் கால்களால் இலகுரக விமானங்களை, 10,000 அடி உயரத்தில் பறக்க உரிமம் பெற்றிருக்கிறாள்.

இவரது பயிற்சியாளர் இந் பெண்ணிடம் உள்ள திறமையை கண்டு வியந்திருக்கிறார். இவரிடம்யிற்சிபெறும் மற்றவர்கள் இந்த பெண்ணின் திறமையை நெருங்ககூட முடியவில்லையாம்.

இவரிடம் முதன் முதலில் இந்த பெண் வரும்போதும், தனியாக தன் கால்களால் காரை ஒட்டிக்கொண்டு வந்துள்ளாள். இதை கண்ட பயிற்சியாளர் இந்த பெண்னால் விமானத்தை ஓட்டுவதில் எந்த சிரமமும் இருக்காது என்று எண்ணி உள்ளார்.




இந்த பெண்ணிற்கு எல்லா விதமான பயிற்சிகளையும் அளித்துள்ளார். இந்த பெண்ணும் தன்னால் முடியாது என்று எதையும் விடாது எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாள்.





தன்னம்பிக்கையின் மீது நாம் நம்பிக்கை வைத்தால் வாழ்வில் வெற்றி நிச்சியம் என்பதற்கு இதைவிட வேற என்ன வேண்டும்.


இதை படித்துவிட்டு நீங்கள் ஓட்டும் பின்னுட்டமும் இடுவீர்கள் என்ற நம்பிக்கையில் நான்....!









|
This entry was posted on 3:22 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 கருத்துகள்:

On 8 ஜூலை, 2009 அன்று 6:46 PM , பெயரில்லா சொன்னது…

i am proud of this girl

 
On 8 ஜூலை, 2009 அன்று 7:07 PM , கும்மாச்சி சொன்னது…

நல்ல பதிவு. மனிதனோட பலம் நம்பிக்கை.