Author: நினைவுகள்-செந்தில்
•10:20 AM
நம் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் BCCI தான். சென்ற ஜனவர்யில் தொடங்கிய இந்திய அணியின் ஆட்டங்கள் இந்த மாதம் வரை தொடர்கிறது. அவர்களும் பாவம் மனிதர்கள் தானே. இயந்திரங்கள் அல்ல. ஓய்வு என்பது வேண்டாமா? இந்திய அணியின் Coach கிறிஸ்டன் கூறியது போல் IPL போட்டிக

Indian Premier LeagueImage via Wikipedia

ள் நமது வீரர்களை கசக்கி பிழிந்து எடுத்துவிட்டது என்பது உண்மைதான். T20 போட்டிகள் சாதாரணமான போட்டிகள் அல்ல. அதில் விளையாடும் வீரர்கள் ஒவ்வொரு பந்துக்கும் அவர்களின் முழு திறமையை வெளிபடுதியே ஆக வேண்டும்.

IPL இல் நன்றாக ஜொலித்தவர்களை தான் இந்திய அணியில் இடம்பிடித்து உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஓய்வு போதாமல் தான் உலக கோப்பை போட்டிகளை அவர்கள் சந்தித்தனர். IPL போட்டிகள் முடிந்து குறைந்தது ஒரு மாதமாவது ஓய்வு அளித்துஇருகக வேண்டும். ஆனால் BCCI நமது வீரர்களை ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரமாக தான் பயன்படுத்துகிறது. அவர்கள் மூலம் எப்படி வருவாய் ஈட்ட முடியம் என்பதில்தான் BCCI கவனம் செலுத்துகிறது என்று தோன்றுகிறது. என்னதான் திறமையும், அனுபவமும் இருந்தாலும், வீரர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியம்.

இந்திய அணியை போல் சிறந்த அணி வேறு இல்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்திய அணியின் வெற்றிகள் தொடரவேண்டுமானால், BCCI தனது வியாபார போக்கினை கைவிடவேண்டும்.

நன்றி.

|
This entry was posted on 10:20 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 கருத்துகள்: