Author: நினைவுகள்-செந்தில்
•6:11 PM
ஹாய் தோனி...!

(தோனியின் இப்போதைய நிலைமை - ஒரு கற்பனை கதை)


உலக கோப்பையின் தோல்விக்கு பிறகு தோனி வீட்டில் சோர்வாக அமர்ந்து இருக்கிறார். அப்போது அவரது அம்மா...

தோ. அம்மா : தோனி இங்க பார். சும்மா மேட்ச் தோத்ததையே நினைச்சுட்டு இருக்காதடா.

தோனி : சும்மா இருமா. உனக்கென்ன தெரியும்? வெளில தள காட்ட முடியல. ரசிகர்கள் எல்லாம் ரொம்ப கோபமா இருக்காங்க. யாரோடவும் பேசக் கூட முடியல.

தோ. அம்மா : நீ இப்படியே இருந்தினா உனக்கு பைத்தியம் தான் புடிக்கும். அதனால நான் சொல்லுறமாதிரி செய். கடைக்கு போய் காய்கறி வாங்கிட்டு வா. வெளில போன உனக்கும் கொஞ்சம் ஆறுதலா இருக்கும்.

தோனி : போம்மா... நான் வெளில போன ரசிகரெல்லாம் என்னை அடிக்கவே வந்துடுவாங்க.

தோ. அம்மா : நீ இப்படியே போன தானே உன்னை அடையாளம் தெரியும். நீ என்னோட புடவையை எடுத்து கட்டிட்டு, பெண் மாதிரி போ. உன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது.

தோனி : முடியாதுமா... எனக்கு பயமா இருக்கு.

தோனி மிகவும் அடம்பிடிக்க... அவரது அம்மா எப்படியோ அவரை சம்மதிக்க வைத்துவிடுகிறார். தோனியும் புடவையை கட்டிக்கொண்டு பெண்ணாக மாறினார். அரை மனதுடன் மார்கெட்டுக்கு காய்கறி வாங்க செல்கிறார்.

மார்கெட்டில் பயந்து பயந்து நடந்து செல்கிறார். யாரவது பார்கிறர்களா என்று சுற்றி பார்த்துக்கொண்டே செல்கிறார். தக்காளி வாங்கினார். வெங்காயம் வாங்கினார்.

"இரண்டு காய் வாங்கியாச்சு... இன்னும் கத்திரிக்காய் மட்டும் வாங்கின போதும். சிக்கிரமா விட்டுக்கு போய்டலாம்" என்று மனதிற்குள்ளே நினைத்துக் கொண்டு கத்திரிக்காய் வாங்க செல்கிறார்.

கத்திரிக்காய் வாங்கிக் கொண்டு திரும்பி வீட்டிற்க்கு வேகமாக நடக்க ஆரம்பிக்கிறார்.

"அப்பாடா.... எப்படியோ எல்லாம் வாங்கியாச்சு. யாருக்கும் என்னை அடையாளம் தெரியலே. நல்ல வேளை தப்பிச்சேன். " என்று நினைத்துக்கொண்டே நடக்கையில்....

"Hai தோனி.....! நீ எப்படி இங்கே?" என்று ஒரு பெண்மணி தோனியை மடக்கினார்.

தோனிக்கு முகம் வெளிறிவிட்டது.....

தோனி : உங்களுக்கு எப்படி நான் தான் தோனி என்று தெரிஞ்சது?

பெண் : என்னை தெரியலையா....? நான் தான் யுவராஜ் சிங்....!

-0-0-0-
-0-
பழைய சரக்கு.... புதிய வடிவில்........ ரசித்தீர்கள் என்றால் ஒட்டு போடவும். கருத்துக்களையும் தெரிவிக்கவும்.


|
This entry was posted on 6:11 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.