Author: நினைவுகள்-செந்தில்
•PM 4:03

ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் எடுப்பது என்பது எட்டாத கனியாக இருந்து வந்தது. அந்த கனியை நமது சச்சின் எட்டி பறித்துவிட்டார் என்று எண்ணும் போது, நிச்சயம் கிரிகெட் பற்றி தெரியாதவர்களுக்கு கூட பெருமையாகதான் இருக்கும்.

நேற்றைய ஆட்டத்தில் சச்சின் 200 ரன்கள் எடுத்தை கொண்டாடும் வேளையில் தோணி செய்ததை எண்ணும்போது மனம் வேதனை அடையத்தான் செய்கிறது. சச்சின் 200 கும் அதிகமா எடுத்து இருக்கவேண்டியது. முடியாமல் போனதிற்கு தோணி தான் காரணம்.
நேற்றைய போட்டியில் சச்சின் 195 இல் இருந்து 200 ரன்கள் எடுக்க 26 பந்துகள் வரை காத்திருக்க வைத்துவிட்டார் தோணி. சச்சினுக்கு, ஆட வாய்ப்பளிக்காமல் இவரே சிக்ஸ்சரும், பவுண்டிருமாக அடித்து கொண்டிருந்தார். ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து விட்டு சச்சினை பேட் செய்ய விடாமல் இவரே தொடர்ந்து கொண்டிருந்தார். சச்சின் 195 அடித்தபின் தோணி, ஓவரின் முதல் 5 பந்துகள் 6 , 4 அடித்துவிட்டு, கடைசி பந்தில் குறிப்பாக ஒரு ரன் மட்டும் ஏன் எடுக்க வேண்டும் ? கடைபந்திலும் 4 ரன் எடுக்க முயற்சி செய்ய வேண்டியது தானே? மெதுவாக அடித்து ஒரு ரன் மட்டும் ஏன் எடுக்க வேண்டும்? ஆட்டத்தின் கடைசி 3 ஓவர்கள் இப்படித்தான் செய்தார்.
45.4 ஓவரில் 196 ரன்களில் இருந்த சச்சினிக்கு பேட் செய்ய வாய்பளித்து இருந்தால் 200 ரன்களுக்கு மேலேயே 10 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்து இருபார். ஒரு நாள் போட்டிகளில் 210 என்பது யாரும் எட்ட முடியாத இலக்காக இருந்திருக்கும். இப்போதும் 200 ரன்கள் எடுப்பது என்பதும் முடியாத காரியம் தான். ஆனால் 200 கும் அதிகமாக எடுத்திருக்க வேண்டியது இந்த தொனியால் தடைபட்டது என்று எண்ணும்போது வருத்தமாக தான் உள்ளது. தோனியின் மேல் இருந்த மதிப்பும் குறைகிறது. தோணி கேப்டனாக பொறுப்பேற்ற பின் தான் இந்திய அணியில் ஒற்றுமை என்பதே வந்தது. ஆனால் ஓர் அணியின் தலைவரே இவ்வாறு, தன் அணியின் வீரர் சாதனையை நோக்கி செல்லும்போது அவரை ஆட வாய்ப்பளிக்காமல் இருப்பது என்பது வேதனையாக உள்ளது.

தோணி எதற்காக கடைசி நிமிடத்தில் அவ்வளவு ஆக்ரோசமாக விளையாடினார் என்பது தெரியவில்லை. இந்திய அணிதான் முதலில் பேட் செய்தது கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் ஏன் அவ்வாறு சச்சினை சாதனை படைக்க விடாமல் ஆக்ரோசமாக ஆடினார் என்பது தான் கேள்வி? ஆனால் இந்நிலைலயும் சச்சின் சிரித்துகொண்டு ஜாலியாகத்தான் இருந்தார் என்பது அவரின் பெருந்தன்மையே காட்டுகிறது.

சச்சினை போல் இன்னொரு வீரர் பிறந்து தான் வரவேண்டும். அவரும் இந்தியனாக தான் இருப்பார் நிச்சியமாக.

ஜெய் ஹிந்த்....!