Author: நினைவுகள்-செந்தில்
•3:02 PM
Marketing Concepts பற்றி நாம் படிக்கும் போது, நமக்கு அது புரிந்தும் புரியாத மாதிரி இருக்கும். அதனால் அதை பற்றிய ஒரு ஜாலியான விளக்கம்....

  • நீங்கள் ஒரு விருந்தில் அழகான, பணக்கார ஒரு பெண்ணை பார்க்கிறிர்கள். நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்"என்று கூறினால் அது Direct Marketing.

  • உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களை காண்பித்து "அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று கூறினால் அது Advertising.


  • நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று கூறினால் அது Telemarketing.

  • அந்த அழகான பெண்ணே உங்களிடத்தில் வந்து "நீங்களும் பணக்கான்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றால் அது Brand Recognition.



  • அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூறுகிறர்கள். உடனே அதற்கு அந்த பெண்ண உங்களின் கன்னத்தில் அறைந்தால்... அதுதான் Customer Feedback.

  • அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று "நானும் பணக்காரன்தான். என்னைதிருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று கூறியதற்கு, அந்த பெண்தன்னுடைய கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.



  • நீங்கள் அந்த பெண்ணிடம் சென்று நீங்கள் பேசுவதற்கு முன்னால் வேறொரு நபர் வந்து அந்த பெண்ணிடம் "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இதுதான் Competition eating your market share.

  • நீங்கள் அந்த அழகான பணக்கார பெண்ணிடம் சென்று "நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்று கூறுவதற்கு முன்பே உங்களின் மனைவி அருகில் வந்தால் Restriction for entering new markets.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே Marketing Concepts என்றால் என்னவென்று....!


என் நண்பர் மின்னஞ்சலில் அனுப்பியது. தமிழாக்கம் என்னுடையது.

பிடித்திருந்தால் ஓட்டும் மற்றும் பின்னுட்டம் இடவும்.





|
This entry was posted on 3:02 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 கருத்துகள்:

On 3 ஜூலை, 2009 அன்று 10:22 AM , நினைவுகள்-செந்தில் சொன்னது…

ஹலோ... யாராவது எதாவது சொல்லுங்கப்பா....

 
On 3 ஜூலை, 2009 அன்று 11:52 AM , பெயரில்லா சொன்னது…

hello boss,

Super vilakkam

by vivek

 
On 3 ஜூலை, 2009 அன்று 11:58 AM , Premanandhan சொன்னது…

really cool, i have read this in English b4, but reading in tamil is so touching.keep it up.

 
On 3 ஜூலை, 2009 அன்று 1:25 PM , பெயரில்லா சொன்னது…

idhellaam eppavo padichchaadhi..

 
On 27 நவம்பர், 2010 அன்று 9:30 PM , suji சொன்னது…

arpudham